மில்க் பியூட்டியை நிராகரிக்கும் இயக்குனர்

Published:

இப்போது தமன்னா இருக்கும் ரேஞ்ச் வேற. ஆரம்பத்தில் மிகவும் பவ்யமாக நடித்து வந்த தமன்னா இப்போது கவர்ச்சியில் தாரளம் காட்டி நடித்து வருகிறார். அந்த வகையில் ரஜினியின் ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார்.

இதைத்தொடர்ந்து தமன்னாவின் நடிப்பில் லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற வெப் சீரிஸ் வெளியானது. இதில் விஜய் வர்மாவுடன் தமன்னா ஓவர் நெருக்கமாக நடித்திருந்தார். தொடர்ந்து தமன்னாவுக்கு இதுபோன்ற பட வாய்ப்புகள் தான் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இயக்குனர் ஒருவர் தமன்னா இந்த கதைக்கு செட்டாக மாட்டார் என்று நிராகரித்து உள்ளார். தமன்னா ஆரம்பத்தில் கல்லூரி, வேங்கை, ஆனந்த தாண்டவம் போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்தப் படங்களில் ஹோம்லி லுக்கில் நடித்து இருப்பார்.

இதைப் பார்த்து தான் நடிகர் லிங்குசாமி பையா படத்தில் தமன்னாவை புக் செய்திருந்தார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது மட்டுமின்றி உடன் கார்த்தி மற்றும் தமன்னாவின் கெமிஸ்ட்ரி வேற லெவலில் பேசப்பட்டது .

இயக்குனர் லிங்குசாமி சில வருடமாக சினிமாவில் இருந்து விலகிய நிலையில் இப்போது மீண்டும் அவர் படங்கள் எடுத்து வருகிறார். கடைசியாக தமிழில் சண்டைக்கோழி 2 எடுத்த நிலையில் தெலுங்கில் தி வாரியார் படம் இயக்கியிருந்தார்.

மேலும் லிங்குசாமி பையா 2 படத்தை எடுக்கலாம் என்ற முடிவில் இருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர் பையா படத்தில் இருந்த ஜாமிங் மற்றும் க்யூட்டான தமன்னா தான் எனக்கு வேண்டும். அப்படி இல்லை என்றால் பையா 2 வின் கதை சரியாக வராது என்று கூறியிருக்கிறார்.

மேலும் பையா 2 படம் எடுத்தால் மீண்டும் கார்த்தியும், தமன்னாவும் சேர்ந்து நடிப்பார்களா என்ற சந்தேகமும் ரசிகர்களிடம் இருக்கிறது.

 

Related articles

Recent articles

spot_img