திருமணத்திற்கு முன்பு எனக்கு ஒரு பையன்….

Published:

விஷ்ணு விஷால் நடிப்பில் 2016 -ம் ஆண்டு வெளியான “வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்” படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ரேஷ்மாவிடம், நீங்கள் வாழ்க்கையில் மனது உடைந்து அழுத நாள் எப்போது என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், ஒரு நாள் கர்ப்பமாக இருக்கும் போது என்னுடைய முன்னாள் கணவர் அடித்துவிட்டார். அந்த சமயத்தில் வயிற்றில் இருந்து குழந்தை பாதி வெளியே வந்துவிட்டது. அப்போது நானே கார் எடுத்துக்கொண்டு மருத்துவமனை வரை சென்றேன். என் மகன் ரகுல் பிறந்து 9 மாதம் வரை இன்குபேட்டரில் தான் இருந்தான்.

அதன் பின் இந்த போராட்டத்தை என்னால் தனியாக சமாளிக்க முடியவில்லை, இந்தியாவுக்கு வந்துவிட்டேன். என் மகனுக்குகாக பல மருத்துவமனைகளை பார்த்து சரி செய்திருக்கிறேன்.

அந்த ரிலேஷன்ஷிப்பிற்கு முன்பு எனக்கு ஒரு பையன் பிறந்து இறந்துவிட்டான். அந்த விஷயம் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதே மாதிரி இவனுக்கும் ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் இருந்தது என்று ரேஷ்மா தெரிவித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img