பனிச்சாரலில் ஒரு க்யூட் வீடியோ..!

Published:

நடிகை ஜோதிகா பனிச்சாரல் உள்ள பகுதியில் எடுக்கப்பட்ட அழகிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் கல் குவிந்து வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா, திருமணத்திற்கு பின்னர் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையுலகில் ரீஎண்ட்ரி ஆனார் என்பதும், அவர் தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டும் நடித்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் ஜோதிகா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் சற்றுமுன் அவர் நேபாள நாட்டிற்கு சென்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் இமயமலை அடிவாரத்தில் பனிபடர்ந்த இயற்கை எழில் கொஞ்சம் சூழலில் மகிழ்ச்சியாக அவர் இருக்கும் காட்சிகளை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ், கமெண்ட்களை குவித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவில் கேப்ஷனாக ஜோதிகா பதிவு செய்திருப்பதாவது

சூரிய முதல் குளிர் உறையும் இரவுகள் வரை,
செங்குத்தான மலைகளில் இருந்து வழுக்கும் நீர்வீழ்ச்சி வரை.

சூடான தண்ணீர் குளிர்ந்த தண்ணீர் உள்ள பிளாஸ்க் வரை
சிரிப்பிலிருந்து குழப்பங்கள் வரை,

விளையாட்டுகள் முதல் வெள்ளை பனி புயல் வரை,
இஞ்சி டீ முதல் பூண்டு சூப்கள் வரை,

நாங்கள் வாங்கிய ஓவியங்கள் முதல் அனைத்தையும் ரசித்தோம்.

https://www.instagram.com/reel/C57sHy3sVDS/?utm_source=ig_web_copy_link

மிக அழகிய சூரிய உதயங்கள் முதல் மாயாஜால சூரிய அஸ்தமனம் வரை
அனைத்தும் என் இதயத்தில் எப்போதும் நினைவாக இருக்கும்!

நாங்கள் உண்மையிலேயே ஒரு இமாலய பணியை முறியடித்துள்ளோம்!!!
இனி என் வாழ்க்கையை வாழ்வதில் பெருமை கொள்வேன். இவை அனைத்தையும்

ஏற்பாடு செய்ததற்கு நன்றி,

ஒரு இனிமையான அனுபவத்திற்கு நன்றி

Related articles

Recent articles

spot_img