கமல்ஹாசனை திடீரென கழட்டிவிட்ட த்ரிஷா.

Published:

கமல்ஹாசன் நடித்து வரும் ’தக்லைஃப்’ திரைப்படத்தில் நாயகியாக த்ரிஷா நடித்து வரும் நிலையில் கமல் ஜோடியாக அவர் நடிப்பதாக தான் இதுவரை செய்திகள் வெளியாகி கொண்டிருந்தன. ஏற்கனவே ’மன்மதன் அம்பு’ ’தூங்காவனம்’ ஆகிய படங்களில் கமல்ஹாசனுடன் த்ரிஷா நடித்திருந்ததால் மீண்டும் கமல்ஹாசன் உடன் ஜோடி சேர்ந்து உள்ளார் என்று செய்திகள் வெளியாகி கொண்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது திடீரென அவர் ’தக்லைஃப்’ படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக த்ரிஷா இல்லை என்றும் அந்த படத்தில் தற்போது புதிதாக இணைந்துள்ள சிம்புவுக்கு தான் ஜோடியாக நடிக்கிறார் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதலில் இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான் விலகியதாக தகவல் வெளியான நிலையில் அவருக்கு பதிலாக தான் சிம்பு நடிக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது துல்கர் சல்மான் விலகவில்லை என்றாலும் கூட சிம்புவும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்றும் அவரது காட்சியும் படப்பிடிப்பும் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் ஜெயம் ரவியும் இந்த படத்தில் இருந்து விலகவில்லை என்றும் அவரும் தனது கேரக்டரை தொடர்கிறார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தான் ’தக்லைஃப்’ படத்தில் புதிதாக இணைந்த சிம்புவுக்கு தான் த்ரிஷா ஜோடியாக நடிக்கிறார் என்றும் ஆனால் அதே நேரத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, சிம்பு ஆகிய மூவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தில் அதிகம் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

சிம்பு ’தக்லைஃப்’ படத்திற்குள் இணைந்ததும் அவருக்கு த்ரிஷா ஜோடி ஆகிவிட்டதை பார்க்கும்போது அப்போ கமல்ஹாசனை அவர் அம்போ என விட்டுவிட்டாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருந்தாலும் மணிரத்னத்தை பொருத்தவரை என்ன கதை சொல்லப் போகிறார் என்பதை யாராலும் யூகிக்க முடியாது என்பதால் ’தக்லைஃப்’ படம் வெளி வந்தால் மட்டுமே கமல்ஹாசன் ஜோடியாக த்ரிஷா நடிக்கிறாரா? அல்லது சிம்புவுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறாரா என்பது தெரியவரும்.

ஏற்கனவே சிம்பு மற்றும் த்ரிஷா ஆகிய இருவரும் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ’விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற படத்தில் ஜோடியாக நடித்தனர் என்பதும் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்தது. 14 வருடங்கள் பந்தம் மீண்டும் ’தக்லைஃப்’ படத்தில் இணையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related articles

Recent articles

spot_img