‘பிரேமலு 2’ ரிலீஸ் எப்போது தெரியுமா?

Published:

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ‘பிரேமலு’ என்ற திரைப்படம் வெறும் 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது என்பது ஆனால் அந்த படம் உலகம் முழுவதும் 136 கோடி ரூபாய் வசூல் செய்து மலையாள திரை உலகையே ஆச்சரியப்படுத்தியது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படம் ரொமான்ஸ் மற்றும் காமெடியாக முழுக்க முழுக்க இருக்கும் என்பதும் சென்டிமென்ட் கொஞ்சம் கூட இல்லாமல் ஜாலியாக கதை நகரும் என்பதால் இளைஞர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் இந்த படத்தை ரசித்து பார்த்தனர்.

இந்த படத்தின் கிளைமாக்ஸில் நாயகன் காதலியை விட்டுவிட்டு லண்டன் செல்வது போல் கதை அமைக்கப்பட்டிருக்கும் என்பதும் அவன் திரும்பி வரும் வரை காத்திருப்பது போன்று நாயகி தனது கண்களால் சொல்லும் காட்சிகள் அம்சமாக இருக்கும் என்பதும் படம் பார்த்தவர்கள் அறிந்ததே.

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் லண்டன் சென்ற நாயகனுக்கு என்ன ஆச்சு? நாயகன் நாயகி காதல் தொடருமா? லண்டனில் இருந்து நாயகன் திரும்பி வருவாரா? என்பதை எல்லாம் இரண்டாம் பாகத்தில் எதிர்பார்க்கலாம்.

முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்பதால் படக்குழுவினர் அதை அந்த பொறுப்பை உணர்ந்து நிச்சயமாக இரண்டாம் பாகத்தையும் வெற்றி பாடமாக்கும் வகையில் உருவாக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

https://x.com/kollycorner/status/1781334109211791439

Related articles

Recent articles

spot_img