பாக்கியாவுக்கு ஆசையாய் பழனி கொடுத்த கிப்ட்

Published:

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், டாக்டர் ராதிகா கர்ப்பமாக இருப்பதை சொல்ல, உண்மையாவே கர்ப்பம் தானா, கொஞ்ச நாள் போனா ரிசல்ட் மாறுமா என கேட்கிறார்.  டாக்டர் உங்க ரெண்டு பேர் முகத்திலையும் சந்தோசம் இல்ல, லேட் கர்ப்பம் என்று யோசிக்கிறிங்களா? முதல் பிள்ளைக்கு என்ன வயசு என கேட்க, இரண்டு பேரும் மாறி மாறி பதில் சொல்லுகிறார்கள்.

இதை தொடர்ந்து காரில் செல்லும் போது செழியனுக்கு பிள்ளை இருக்கு, எழிலும் இன்னும் கொஞ்ச நாளைல பெத்துடுவான், இனியாவுக்கு கல்யாணம் என கோபி பேசிக் கொண்டு வர, ராதிகா அப்போ என்ன பத்தி யோசிக்க மாட்டிங்களா என திட்டுகிறார். அந்த நேரத்தில் ஈஸ்வரி போன் பண்ணி விசாரித்துவிட்டு, கிச்சனுக்கு வருமாறு கோபியை கூப்பிடுகிறார்.

அதன்பின் ராதிகா தன்னை தனது அம்மா வீட்டில் விடுமாறு சொல்லி அங்கு செல்கிறார். அங்கும் அவர் வாந்தி எடுக்க, ராதிகா விஷயத்தை சொல்லுகிறார். இதனால் அவர் சந்தோசப்பட்டு ஜூஸ் கொடுக்கிறார். மேலும் ராதிகா குழப்பமா இருக்கு என்று சொல்ல, உனக்கும் மாப்பிள்ளைக்கும்  இந்த குழந்தை தான் பிடிப்பு. அதனால் சந்தோசமா இரு என சொல்லுகிறார்.

மறுப்பக்கம் ஈஸ்வரி கோபியின் கிச்சனில் இருக்க, அங்கு கோபி வருவதை பார்த்துவிட்டு முடியாதமாதிரி ஆக்சன் போடுகிறார். மேலும் பாக்கியா இதனை நாள் பிசினஸ் பண்ணுற, ஒரு நாள் கூட என்னை கூப்பிட்டது இல்லை என சொல்லுகிறார்.

இன்னொரு பக்கம் பாக்கியாவை பார்க்க பழனிச்சாமி அவரது ரெஸ்டாரண்ட் செல்கிறார். அவருக்கு செல்வி ஸ்னேக்ஸ் கொண்டு போய் கொடுத்து, இதை அக்கா உடனே செய்து உங்களுக்கு கொடுக்க சொன்னாங்க என ஏத்தி விடுகிறார்.  அவர் ரசித்து சாப்பிடும் போது அங்கு பாக்கியா வர, அவர்க்கு சில புத்தகங்களை பரிசாக கொடுக்கிறார்.

பாக்கியா உடனே  எவ்வளவு என்று கேட்க, அன்புக்கு விலை பேசாதைங்க என பழனி சொல்லுகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Related articles

Recent articles

spot_img