கவினுடன் இணையும் அப்பாவி நடிகை

Published:

சசிகுமார் நடிப்பில் அறிமுக இயக்குனரான மந்திர மூர்த்தி இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு அயோத்தி திரைப்படம் வெளியாகியது. யாஷ்பால் ஷர்மா,பிரீத்தி அஸ்ரானி, புகழ், போஸ் வெங்கட் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பர்.

பிரீத்தி அஸ்ரானி அப்பாவி முகத்துடன் தன் அம்மாவை இழந்த துக்கத்தை மிகத் திறம்பட அயோத்தி படத்தில் நடித்திருப்பார். அயோத்தி திரைப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து பிரீத்தி அஸ்ரானி அடுத்ததாக கவினின் 5 வது படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை நடன இயக்குனரான சதீஷ் இயக்கி வருகிறார். இது ஒரு ஜாலியான நகைச்சுவை கதைக்கள பிண்ணனியில் உருவாகவுள்ளது.

அயோத்தியில் நான் நடித்த கதாப்பாத்திரத்தை விட இது முற்றிலும் மாறுப்பட்டது என்று சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். இதற்கடுத்து ரியோ நடிக்கும் அடுத்த படத்திலும் ஒப்பந்தம் ஆகியிருப்பதாக கூறியுள்ளார் பிரீத்தி அஸ்ரானி.

Related articles

Recent articles

spot_img