ஜல்லிக்கட்டு காளையுடன் ‘நின்னு விளையாடு”

Published:

ராஜ் பீக்காக் மூவிஸ் சார்பில் எம்.கார்த்திக் தயாரிக்கும் படம் ‘நின்னு விளையாடு’. இதில் டான்ஸ் மாஸ்டர் தினேஷ்குமார் ஹீரோவாக நடிக்கிறார். கேரளத்து வரவு நந்தனா ஆனந்த் ஹீரோயினாக நடிக்கிறார். தீப சங்கர், பழ கருப்பையா, பசங்க சிவக்குமார், சாவித்திரி உள்பட பலர் நடிக்கிறார்கள். சத்யதேவ் உதய்சங்கர் இசையமைக்கிறார். பிச்சுமணி ஒளிப்பதிவு, கி.சங்கர் எடிட்டிங். சி.சௌந்தரராஜன் எழுதி, இயக்குகிறார். எம்.சரத்குமார், கீர்த்திவாசன் இணைந்து தயாரிக்கிறார்கள்.

சாமானியனின் வாழ்க்கையை காதலுடன் இணைத்து குடும்ப கதையாக சொல்லும் படம் இது. ஹீரோ காளை மாடு வளர்க்கிறார். அதன் மேல் பிரியத்துடன் இருக்கிறார். காதலா, காளைமாடா என்ற சூழலும் உருவாகிறது. சாதி மதங்களை இணைக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை பின்னணியாகக் கொண்டு படம் உருவாகியுள்ளது. அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.

https://x.com/VijaySethuOffl/status/1781663100091142187

இப் படத்தின் பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img