‘ஒரு நொடி’ திரைப்பட லெடஸ்ட் அப்டேட்

Published:

“அறிமுக இயக்குனர் மணிவர்மன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஒரு நொடி’. இந்த படத்தில் ‘தொட்டால் தொடரும்’ பட நாயகனும் ‘அயோத்தி’ படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்த தமன் குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா, தீபா ஷங்கர், சிவரஞ்சனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மதுரை அழகர் புரொடக்ஷன் கம்பெனி மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் இசையமைக்கிறார். கே.ஜி.ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு எஸ்.குரு.சூர்யா படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், பாஃப்டா திரைப்படக் கல்லூரி நிறுவனரும், ‘காற்றின் மொழி’, ‘இவன் தந்திரன்’, ‘கோடியில் ஒருவன்’, ‘கொலைகாரன்’ போன்ற படங்களை வெளியிட்ட விநியோகஸ்தருமான தனஞ்செயன் இப்படத்தை முன்னின்று வழங்குகிறார். ‘ஒரு நொடி’ படத்தின் படப்பிடிப்புகள் முழுமையடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்ற நிலையில், வெகுவிரைவில் திரையில் இப்படத்தை காணலாம். படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் குறிப்பிட்ட இடைவெளியில் வெளியிடப்படும்

இம் மாதம் 26 ம் திகதி இப் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந் நிலையில் படத்தின் டிரெலர் வெளியாகியுள்ளது.கணவனை தேடி போலிசில் புகார்  கூறும் மனைவியின் கம்பலேனுக்கு அடுத்து நடக்கும் கதைகளமே இப் படம் என காட்டப்படுகிறது. இத் தேடலில் நடைபெறும் விடயங்கள் பிரச்சினைகள் காட்ப்படுகிறது.

Related articles

Recent articles

spot_img