விஷால் சொன்ன கதை நிஜமா? உருட்டா?

Published:

நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படம் வசூல் ரீதியில் மிகப்பெரிய சாதனையை படைத்திருந்தது.

லியோ படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய் தத், திரிஷா, அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின் என திரை பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.

லியோ திரைப்படத்தில் சாதாரண மனிதராக ஒரு வேடத்திலும்,  கேங்ஸ்டர் ஆக இன்னொரு  வேடத்திலும் இளைய தளபதி நடித்து கலக்கியிருந்தார். விஜய்யின் சித்தப்பாவாக ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் பட்டையை கிளப்பி இருந்தார்.

இந்த நிலையில், லியோ படத்தில் நடிகர் விஷால் நடிக்க  இருந்ததாகவும் தான் மறுத்ததன் காரணமாகவே அர்ஜுன் அதில் நடித்ததாகவும் விஷால் கூறியுள்ளார்.

அதாவது ஆரம்பத்தில் லோகேஷ் கனகராஜ் தன்னை லியோ படத்தில் நடிக்க கூப்பிட்ட போது, இது அண்ணன் தம்பி கதையாகவே இருந்ததாக கூறிய விஷால், தான் அதில் நடிக்க மறுத்த நிலையில் அந்த கதாபாத்திரம் சித்தப்பாவாக மாறி அதில் அர்ஜுன் நடித்ததாகவும் கூறியுள்ளார். தற்பொழுது இந்த தகவல் வைரலாகி வருகின்றது.

மேலும் இனிவரும் நாட்களில் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இணைந்து நடிக்க சந்தர்ப்பம் இருக்கா என கேட்டதற்கு எனக்கு தெரியவில்லை என பதில் கூறியுள்ளார் விஷால்.

Related articles

Recent articles

spot_img