ஜீவா தானே அந்த காச எடுத்துட்டு கனடா ஓடிட்டா

Published:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில் ரூமில் சோகமாக வந்து மனோஜ் இருக்க, என்னாச்சு என ரோகிணி கேட்கிறார். அதற்கு அண்ணன், தம்பி இரண்டு பேருமே மேல வந்துகிட்டு இருக்காங்க. நான் மட்டும் தண்ணில போட்ட கல்லு மாதிரி கீழே போய் கிட்டே இருக்கன் என மனோஜ் பாவமாக  சொல்லுகிறார்.

மேலும் என்னால சொந்த பிசினஸ் பண்ணினா அச்சிவ்  பண்ணுவேன் என்று நம்பிக்கை இருக்கு. ஆனா காசுக்கு தான் என்ன பண்றதுன்னு தெரியல என புலம்பிக் கொண்டிருக்கிறார்.

 

அதற்கு ரோகிணி, அங்கிள் கொடுத்த 27 லட்சத்தை நீ தொலைச்ச தானே என்று கேட்க, ஜீவா தானே அந்த காச எடுத்துட்டு கனடா ஓடிட்டா என்று மனோஜ் சொல்கிறார். அதற்கு ரோகிணி, ஜீவா தான் நமக்கு இப்போ இருக்கிற ஒரே வழி. எப்படியாவது அவளை கண்டுபிடிக்கணும் என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் முத்து காரில் ஒருவரை சவாரிக்கு ஏற்றிக் கொண்டு செல்லும்போது, எங்கே இருந்து வாறீங்க மேடம் என முத்து கேட்க, அவர் கனடாவில் இருந்து வருவதாக கூறுகிறார்.

இவ்வாறு மனோஜ், ரோகினி தேடும் ஜீவா, தற்போது முத்து காரிலேயே வருவது சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே மனோஜ்க்கு அந்த 27 லட்சம் கிடைக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

Related articles

Recent articles

spot_img