ரஷ்ய ஊடகத்திற்கு வெங்கட் பிரபு பேட்டி..!

Published:

தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது மாஸ்கோவில் நடைபெற்று வரும் நிலையில் விஜய் தனது காட்சிகளின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சமீபத்தில் தான் சென்னை திரும்பினார் என்றும் அவர் வாக்களிப்பதற்காக சென்னை திரும்பியதாகவும் கூறப்பட்டது.

விஜய் சென்னை திரும்பினாலும் ‘கோட்’ படத்தின் குழுவினர் மாஸ்கோவில் தான் தற்போது உள்ளனர் என்றும் அங்கு தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் மாஸ்கோவில் உள்ள ஊடகம் ஒன்றுக்கு இயக்குனர் வெங்கட் பிரபு பேட்டியளித்த போது சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார். ‘இந்த படத்தில் மாஸ்கோ ஒரு முக்கிய கேரக்டரில் உள்ளது என்றும் இந்தியர்கள் பார்க்காத பல மாஸ்கோவில் உள்ள இடங்களை இந்த படத்தில் நாங்கள் காண்பிக்க விருப்பப்பட்டு உள்ளோம் என்றும் தெரிவித்தார்.

சில பாலிவுட் படங்கள் மாஸ்கோவில் படமாக்கப்பட்டு இருந்தாலும் தென்னிந்திய படங்கள் பெரும்பாலும் மாஸ்கோவில் படமாக்கப்படவில்லை என்றும் எங்கள் ஆடியன்ஸ்களுக்கு மாஸ்கோவை ஒரு புதிய கோணத்தில் காண்பிக்க வேண்டும் என்ற ஆசை இந்த படத்தில் நிறைவேறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படம் குறித்து ஒரு டாக்குமென்டரி படமே மாஸ்கோவின் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி உள்ளது என்பதும் பெருமைக்குரிய ஒரு செய்தியாகும்.

https://x.com/RT_com/status/1781744643127890425

Related articles

Recent articles

spot_img