’சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்

Published:

கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான ’சர்தார்’ திரைப்படத்தில் தண்ணீர் வணிகம் குறித்த பின்னணியை கூறிய நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் மிகவும் சென்சிட்டிவான விஷயத்தை கையில் எடுக்கப் போவதாக கூறப்படுகிறது

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான ’சர்தார்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்த படத்தின் கதையின் படி மினரல் வாட்டர் என்ற பெயரில் விற்கப்படும் பாட்டில் வாட்டர் மற்றும் கேன் வாட்டர் குடிப்பதால் ஏற்படும் தீங்கு, இந்த தண்ணீரின் பின்னணியில் இருக்கும் கோடிக்கணக்கான வணிக அரசியல் ஆகியவை அப்பட்டமாக காட்டப்பட்டு இருந்தது என்பதும் இந்த படம் வெளியான பிறகு பல மினரல் வாட்டர் குடிப்பதற்கு தயங்கும் அளவுக்கு இந்த படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கும் நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் முதல் பாகத்தில் தண்ணீர் விவகாரம் குறித்த கதையை ஆழமாக கூறிய பிஎஸ் மித்ரன் இரண்டாம் பாகத்தில் போதை விவகாரம் குறித்த பின்னணியை சொல்ல இருக்கிறாராம். கடந்த சில வாரங்களாகவே போதைப் பொருள் கடத்தியதாக ஜாபர் சாதிக் உட்பட சிலர் கைது செய்யப்பட்டதும், அவருக்கும் திரையுலகில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் பிஎஸ் மித்ரன் தற்போதைய சென்சிட்டிவான விஷயத்தை கையில் எடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related articles

Recent articles

spot_img