அஜித்தின் 63வது படத்தில் தெலுங்கு நடிகையா?

Published:

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் தல என அழைக்கப்படும் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தை மகிழ்  திருமேனி இயக்குகின்றார்.

விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் இந்த படத்திற்காக அஜித் குமார் எடுத்த ரிஸ்கை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தார்கள்.

விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித்தின் 63வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். சமீபத்தில் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியானது.இந்த படத்திற்கு குட் பேட் அக்லி என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், தெலுங்கில் பிரபல நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கின்றார்.

மேலும் குட் பேட் அக்லி படத்தின் வில்லன் ரோலில் நடிப்பதற்கு பாபி தியோல் நடிக்க கமிட்டான நிலையில் அவர் விலகி இருந்தார். அதன்பின் பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் மற்றும் எஸ்.ஜே சூர்யா இதில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் கூறப்பட்டது.

இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா உடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.அஜித்தின் 63வது படத்தில் ஸ்ரீ லீலா நடித்தால் அவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது என்பதும், இவர் மகேஷ் பாபு நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படத்தில் குத்தாட்டம் போட்டு இருந்தார் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img