மீனாவுக்கு நடமாடும் பூக் கடை

Published:

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், முத்து எல்லாரையும் கீழே வர சொல்லி, மீனாவுக்கு நடமாடும் பூக் கடை என்று புது பைக் வாங்கி கொடுக்கிறார். இதை பார்த்து விஜயா, ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்கள். மேலும் விஜயா பெயர்ல பாலரம்மா கடை வச்சிச்சு ஆனா அது மாறிட்டு, மீனா பூக்கடையும் தூக்கிட்டு போய்ட்டாங்க. அதனால அந்த பெயர் ராசி இல்லை என்று பைக்க்கு மீனா என்று பெயர் வைத்துள்ளார். அதன்பின் முத்துவை ஏற்றிக் கொண்டு பைக்ல ரவுண்டு போகிறார்.

மறுபக்கம் மனோஜ், எல்லாரும் முன்னுக்கு வாறாங்க, நான் மட்டும் கீழ போய்ட்டு இருக்கன். யாரும் எனக்கு உதவி செய்ய இல்லை என புலம்ப, நமக்கு காசு வேணும். அதுக்கு நீ அங்கிள்ட வாங்கின 27 லட்சத்தை எடுத்துட்டு போன ஜீவாவை கண்டு பிடிக்கணும் என சொல்லுகிறார்.

இதை தொடர்ந்து மீனா தனது வீட்டுக்கு சென்று புது பைக் வாங்கியதை காட்டி மகிழ்கிறார். ஆனாலும் சத்யா முத்துவை அசிங்கப்படுத்துவது போல பேச, மீனாவின் அம்மா அவருக்கு பேசுகிறார்.

இதையடுத்து, மனோஜ், ரோகிணி வெளிநாட்டு முகவர் இருக்கும் இடத்திற்கு சென்று, ஏற்கனவே நான் இங்க வந்து இருக்கன் ஒரு பொண்ண கனடா அனுப்பி வைக்க என்று ஜுவாவின் போட்டோவை காட்ட, நீ இன்னும் ஜீவாட போட்டோவ போன்ல வச்சா இருக்கா என பேச, இல்லை அது மெயில்ல இருந்து எடுத்தன் என சொல்லுகிறார். அவருக்கு போட்டோவை காட்ட, அவர் தெரியவில்லை என்று சொல்கிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Related articles

Recent articles

spot_img