என்ன ஆச்சு வெங்கட்பிரபுவுக்கு?

Published:

தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தில் த்ரிஷா ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதாகவும் இந்த பாடலின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்ததாகவும் தகவல் வெளியான நிலையில் இந்த பாடல் காட்சி நீக்கப்படுவதாக தற்போது அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளதால் த்ரிஷா ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை த்ரிஷா ’கோட்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளதாகவும் இந்த பாடல் படத்தின் ஹைலைட் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இந்த பாடல் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த பாடல் தமிழ் ரசிகர்களுக்கு மட்டுமே இருக்கும் என்றும் தெலுங்கு ரசிகர்களுக்காக புதிதாக இந்த பாடல் உருவாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழில் த்ரிஷா நடனமாடிய பாடலுக்கு தெலுங்கில் நடிகை ஸ்ரீலீலா நடனமாட இருப்பதாகவும் அவரது நடன காட்சி மற்றும் சில காட்சிகள் இன்னும் ஒரு சில நாட்களில் படமாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அனேகமாக ரஷ்யாவில் இருந்து படக்குழு திரும்பியவுடன் அந்த பாடல் காட்சி படமாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

தமிழைப் போலவே தெலுங்கிலும் த்ரிஷாவின் பாடல் காட்சி இடம் பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தெலுங்கில் த்ரிஷாவின் பாடல் காட்சி தெலுங்கில் இல்லை என்று கூறப்பட்டாலும் அதற்கு பதிலாக ஸ்ரீலீலா நடனமாடுவார் என்று செய்தி வெளியானதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மொத்தத்தில் இந்த படத்தில் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு காட்சியையும் திட்டமிட்டு வெங்கட் பிரபு செய்து வருவதை அடுத்து இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related articles

Recent articles

spot_img