மீண்டும் காதலனை கழட்டி விட்ட சுருதிகாசன்!

Published:

நடிகை ஸ்ருதிஹாசன் ஏற்கனவே லண்டனை சேர்ந்த மைக்கேல் என்பவரை காதலித்து அதன் பின் பிரேக்கப் ஆன நிலையில் தற்போது மும்பையை சேர்ந்த டூடுல் கலைஞர் சாந்தனு என்பவரை காதலித்து வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் திடீரென சாந்தனுவை சமூக வலைதளத்தில் ஸ்ருதிஹாசன் அன்ஃபாலோ செய்துவிட்டதால் இருவரும் பிரேக் அப் ஆகி பிரிந்து விட்டார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் நடிகை மட்டுமின்றி பாடகி, இசையமைப்பாளர் என பல அவதாரங்களில் ஜொலித்து வருகிறார் என்பதும் சமீப காலமாக அவர் தெலுங்கு திரைப்படங்களில் பிஸியாக உள்ளார் என்பது தெரிந்தது

இந்த நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து ’இனிமேல்’ என்ற மியூசிக் ஆல்பத்தில் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார் என்பதும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கமல்ஹாசன் பாடல் வரிகளில் உருவான இந்த ஆல்பம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனை சேர்ந்த மைக்கேல் என்பவரை ஸ்ருதிஹாசன் காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் பின்னர் இருவரும் பிரேக்கப் ஆகி பிரிந்து விட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்ருதிஹாசன் மும்பையை சேர்ந்த டூடுல் கலைஞர் சாந்தனு என்பவரை காதலித்து வருவதாகவும் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது என்றும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது திடீரென ஸ்ருதிஹாசன், சாந்தனு சம்பந்தப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிட்டதாகவும் அவரை அன்ஃபாலோ செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஸ்ருதிஹாசன் மீண்டும் காதலரை பிரேக்கப் செய்துவிட்டாரா என்று கூறப்படும் நிலையில் இது குறித்து அவரே விரைவில் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

https://www.instagram.com/shrutzhaasan?utm_source=ig_web_button_share_sheet&igsh=ZDNlZDc0MzIxNw==

Related articles

Recent articles

spot_img