‘குக் வித் கோமாளி’ சீசன் 5 ஆரம்பம்..

Published:

விஜய் டிவியில் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி இன்று முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை ஹாட்ஸ்டாரில் வெளியானதை அடுத்து பார்வையாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சியை பார்த்து ரசித்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியை ரக்சன் மற்றும் மணிமேகலை தொகுத்து வழங்கும் நிலையில் முதல் கட்டமாக புகழ், குரேஷி, சரத் மற்றும் சுனிதா ஆகிய நான்கு கோமாளிகள் என்ட்ரி ஆகிறார்கள். அதன் பின்னர் புதிய கோமாளிகள் ராமர், கேபிஒய் வினோத், நாஞ்சில் விஜயன், அன்ஷிதா, வைஷாலி உள்ளிட்டோர் அறிமுகமாகின்றனர்.

இதனை அடுத்து நடுவர்கள் செஃப் தாமு மற்றும் செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகிய இருவரும் அட்டகாசமாக அறிமுகமாக முதல் நாள் எபிசோடு சூப்பராக தொடங்கியது. இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் குக்குகள் வரிசையாக ஒவ்வொருவராக அறிமுகமாகிறார்கள்.

முதலில் திவ்யா துரைசாமி, அதனை அடுத்து இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் சூப்பர் சிங்கர் பூஜா ஆகியோர் அட்டகாசமாக அறிமுகமாகும் காட்சி உள்ளது. அதன் பின்னர் யூடியூபர் இர்பான், பாண்டியன் ஸ்டோர் நடிகர் வசந்த் வெற்றி ஆகியோர் அறிமுகம் ஆகின்றனர்.

இதனை அடுத்து அடுத்த குக்காக விஜய் டிவி பிரியங்கா, நடிகர் வி டிவி கணேஷ், பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா ஆகியோர் அறிமுகமாகும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மொத்தத்தில் இன்றைய எபிசோடில் குக்குகள் மற்றும் கோமாளிகள் அறிமுகம் மட்டுமே நடந்துள்ள நிலையில் நாளை முதல் சமையல் போட்டி கலகலப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related articles

Recent articles

spot_img