ஸ்டேஷனில் ஜீவாவுக்கு ஹெல்ப் பண்ணிய முத்து .

Published:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் ஜீவா வேறு வழி இன்றி மனோஜ்க்கு பணத்தை ட்ரான்ஸ்ஃபர் பண்ணுகிறார். அந்த நேரத்தில் மனோஜ்க்கு சாட்சியாக ரோகிணி கையெழுத்து வைக்க உங்களுக்கு சாட்சி யார் என ஜீவாவை போலீஸ் காரர் கேட்கின்றார்.

இதை அடுத்து எனக்கு தான் லோயர் இருக்காரு என்று சொல்ல, அது செல்லாது என போலீசார் சொல்கின்றார்கள். இதே தொடர்ந்து ஜீவா கான்ஸ்டபிள் ஒருவருடன் வெளியே போக, அங்கு முத்துவும்  மீனாவும் நிற்கின்றார்கள்.

முத்துவிடம் நேராக சென்ற கான்ஸ்டபிள் இந்த பொண்ணுக்கு ஒரு சாட்சி கையெழுத்து போடணும் என்று கேட்க, ஜீவாவும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன் என்று கேட்கிறார். இதனால் அது என்னவென்று பார்க்காமல் உடனே கையெழுத்து போட்டுக் கொடுக்கிறார் முத்து.

வீட்டுக்கு வந்த மனோஜ் எல்லாரும் சாப்பிடும் போது இத்தனை நாள் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தன் ஆனால் இப்பொழுது எனக்கு 15 லட்சம் கிடைச்சிருக்கு என்று சொல்லுகிறார்.

ஆனால் அந்த பணத்தை ஜீவா கொடுத்தது அன்று சொல்லவில்லை. இதனால் அங்கு இருந்த முத்து பார்லரம்மாட அப்பா பணம்  அனுப்பி இருந்தால் ரோகிணிக்கு தானே பணம் வந்திருக்கணும். உன்ட அக்கவுண்டுக்கு எப்படி வந்துச்சு என கேட்கிறார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.

Related articles

Recent articles

spot_img