அவர் எப்படிபட்டவர்- ஆனால் கவின் ஓபன் டாக்

Published:

தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நாயகனாக நடிகர் கவின் வலம் வருகிறார்.

டாடா என்ற படம் அவருக்கு சிறந்த நடிகர் என்ற பெயரை வாங்கி கொடுத்துள்ளது. அப்படம் கொடுத்த வெற்றி அடுத்தடுத்து நிறைய படங்கள் கமிட்டாகி இருக்கிறார்.

இப்போது பியார் பிரேமா காதல் பட புகழ் இளன் இயக்கத்தில் ஸ்டார் என்ற படத்தில் கவின் நடித்துள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிக்க விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஒரு படம் இயக்க இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

இந்த படத்தில் கவின் நடிக்க பேச்சு வார்த்தை நடப்பதாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து கவின் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

அதில் அவர், இந்த புதிய படத்திற்காக மீட்டிங் நடந்தது உண்மைதான், எனது கமிட்மெண்ட் எல்லாம் சொல்லியிருக்கிறேன். சில மாற்றங்கள் செய்துவிட்டு மீண்டும் சந்திக்கலாம் என்று கூறினார்கள், அதன்பிறகு எந்த அழைப்பும் வரவில்லை என்றார்.

ஜேசன் சஞ்சய் பற்றி கூறியதாவது, விஜய் அவர்களை நாம் பெரிய அளவில் கொண்டாடி பேசுவோம், ஆனால் அவர் எதுவுமே இல்லாமல் எப்போதும் சாதாரணமாக இருப்பார்.

அப்படி தான் ஜேசன் சஞ்சய்யும், அவரிடமும் பிரபலத்தின் மகன் என்று எந்த எண்ணமும் இல்லை. மிகவும் அமைதியான எல்லோரையும் மதிக்க கூடிய ஒருவர் என தெரிவித்திருக்கிறார் கவின்.

Related articles

Recent articles

spot_img