‘மீசைய முறுக்கு’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் ஹிப் ஹாப் ஆதி. இவர் ஆல்பம் பாடல்களை வெளியிட்டு வந்த நிலையில், ஹிப் ஹாப் பாடல்களின் மூலம் படங்களிலும் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படத்திற்கும் இசையமைத்துள்ள இவர், பல்வேறு ஹிட் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். அத்துடன் நட்பே துணை, நான் சிரித்தால், வீரன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள பி.டி சார் படத்தின் டிரைலர் வைரல் ஆகி உள்ளது. இந்த படத்தில் விளையாட்டு துறை ஆசிரியராக காணப்படும் ஆதி, அவரது வாழ்வில் எதிர் நோக்கும் பிரச்சினைகளை கதைக்களமாக கொண்டு காணப்படுகிறது. அத்துடன் பெண்களுக்கு உடல் ரீதியாக ஏற்படும் பிரச்சினைகள் பற்றி பேசும் படமாகவும் காணப்படுகிறது.
இந்த திரைப்படம் எதிர்வரும் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் காஷ்மிரா பர்தேசி, பாக்கியராஜ், பிரபு, பாண்டியராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.