செல்வராகவனின் சம்பவம் லோடிங்

Published:

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் செல்வராகவன். இந்த படத்தில் அவருடைய தம்பியான தனுஷை ஹீரோவாக அறிமுகப்படுத்தி இருந்தார்.

இதைத்தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு சோனியா அகர்வால், ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியான படம் தான் 7ஜி ரெயின்போ காலனி. இந்தப் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதோடு இன்றளவில் மட்டும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த படமாகவும் காணப்படுகிறது.

இந்த படத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வாலின் நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்த படத்தின் வெற்றிக்கு யுவன் சங்கர் ராஜாவின் இசையும் முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த நிலையில், 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாவது பாகம் தொடர்பிலான பர்ஸ்ட் லுக் போஸ்டரை சற்று முன் செல்வராகவன் அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குறித்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. 

இதேவேளை ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பிலான அப்டேட்களையும் ரசிகர்கள் செல்வராகவனிடம் கேட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img