வீட்டுக்கு வீடு வாசல் படி பிரபலம் வீட்டில் விசேஷம்

Published:

விஜய் டிவியில் பிரபலமான சீரியலான வீட்டுக்கு வீடு வாசல் படி பிரபலம் வீட்டில் நடந்துள்ள விசேஷத்தினால் அவர்களின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சன் டிவியில் ஒளிபரப்பான தில்லானா தில்லானா என்ற டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் அவினாஷ். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வீட்டுக்கு வீடு வாசல் படி என்ற சீரியலில் நடித்துக் கொண்டுள்ளார்.

தில்லானா தில்லானா நிகழ்ச்சிக்கு பிறகு ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் அதன் பின் நடன கலைஞராக பல ரியாலிட்டி ஷோகளில் தனது திறமையை வெளிக்காட்டினார்.

இதைத் தொடர்ந்து அவினாஷிக்கு அழகு சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதில் தலைவாசல் விஜய் – ரேவதிக்கு மகனாக நடித்திருந்தார். இந்த சீரியலில் இவருக்கு மிகப்பெரிய பிரபலம் கிடைத்தது.

அதன் பின்பு அம்மன், சாக்லேட், கயல் போன்ற சீரியல்களில் எல்லாம் நடித்தார். எனினும் கயல் சீரியலில் இருந்து திடீரென விலகி இருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வீட்டுக்கு வீடு வாசல் படி என்ற சீரியலில் கண்ணன் என்ற கேரக்டரில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில், சமீபத்தில் தனது 13 வருட காதலியான தெரேசா என்பவரை திருமணம் செய்து கொண்டு அவினாஷ், தற்போது தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சந்தோஷமாக தெரிவித்துள்ளார்.

இதன் போது மனைவியின் ஸ்கேன் ரிப்போர்ட் மற்றும் குழந்தையின் ஸ்கேன் போட்டோவை வைத்து போட்டோ சூட் எடுத்துள்ளார்கள். இதற்கு ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

https://www.instagram.com/p/DERguUkSPcS/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==
https://www.instagram.com/p/DEUBC3Yp8EH/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Related articles

Recent articles

spot_img