வணங்கான் 3வது சிங்கிள் இப்போது வெளியாகியுள்ளது🎶

Published:

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவான வணங்கான் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. அதே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் விடாமுயற்சி மற்றும் ஷங்கரின் இயக்கத்தில் உருவான கேம் சேஞ்சர் ஆகிய படங்களும் வெளியாகின்றன. எனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பலத்த போட்டி நிலவும் என்றே தெரிகின்றது.

மேலும் விடாமுயற்சி மற்றும் கேம் சேஞ்சர் என இரு மிகப்பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாவதால் வணங்கான் திரைப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு தியட்டர்கள் கிடைக்குமா ? என்ற சிக்கல் எழுந்துள்ளது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் இதே கருத்தை தான் கூறியிருந்தார். அஜித்தின் படம் வெளியாவதால் ஆட்டோமெட்டிக்காக அவரின் படத்திற்கு தான் அதிக திரைகள் கிடைக்கும். எனவே தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் இருக்கும் என்றார். இருப்பினும் பொங்கலுக்கு வணங்கான் கண்டிப்பாக வெளியாகும் என்றும் உறுதியளித்தார்.

இந்நிலையில் விடாமுயற்சி மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் மட்டுமே தான் பொங்கலுக்கு வெளியாகும். வணங்கான் பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக வதந்திகள் பரவி வந்தன. ஆனால் ஒருபக்கம் வணங்கான் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பாலா பிசியாக இருந்து வருகின்றார். ஊடகங்களை சந்தித்து தொடர்ந்து பேட்டிகள் கொடுத்து வருகின்றார். இதெல்லாம் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

வணங்கான் திரைப்படம் ஜனவரி 10 ஆம் தேதி திரையில் வெளியாக இருப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். எனவே இந்த பொங்கலை முன்னிட்டு மும்முனை போட்டி உறுதியாகியிருக்கின்றது. அஜித்தின் விடாமுயற்சி, ஷங்கரின் கேம் சேஞ்சர் மற்றும் பாலாவின் வணங்கான் என மூன்று படங்கள் இந்த பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கின்றது.

இப் படத்தின் மூன்றாவது பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இப் பாடலை ஜீ .வி .பிரகாஷ் இசை அமைத்து சைந்தவி பாடியுள்ளார்.

Related articles

Recent articles

spot_img