கங்குலி படத்தில் நான் நடிக்கவில்லை: ரன்பீர் கபூர் மறுப்பு

Published:

முன்னாள் கிரிக் கெட் கேப்டன் கங்குலியின் வாழ்க்கை திரைப்படமாக தயாராக இருக்கிறது. இதில் கங்குலி வேடத்தில் ரன்பீர் கபூர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. சமீபத்தில் ரன்பீர் கபூரும், கங்குலியும் சந்தித்து பேசியதை தொடர்ந்து இந்த தகவல் வெளியானது. இதனை ரன்பீர் கபூர் மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

கங்குலி உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு கிரிக்கெட் லெஜண்ட். அவரது வாழ்க்கை சினிமாவாவது ஒரு சினிமா கலைஞனாக எனக்கு மகிழ்ச்சி. ஆனால் துரதிர்ஷ்டவசமான நான் அதில் நடிக்கவில்லை. எனக்கு இயக்குனர்கள் காதல் கதைகளைத்தான் எழுதி வருகிறார்கள். எனக் கும் காதல் கதைகள்தான் செட்டாகும். என்று தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே தோனி, சச்சின், மிதாலிராஜ் ஆகியோரின் வாழ்க்கையும், இந்தியா கபில்தேவ் தலைமையில் உலக கோப்பைபை வென்றதை பின்னணியாக கொண்டாடும் திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. அடுத்து கங்குலி வாழ்க்கை சினிமாவாவது உறுதி என்றாலும் அதில் நடிப்பது யார்? என்ற கேள்வி தொடர்கிறது.

Related articles

Recent articles

spot_img