வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி கதையின் நாயகர்களாக நடித்துள்ள விடுதலை படத்தின் பாடல்கள் வெளியாகயுள்ள நிலையில், படத்தின் டீஸரும் வெளியிடப்பட்டுள்ளது.
எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் விடுதலை படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. முதல் பாகத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் இசை வெளியீடு இன்று மாலை நடைபெற்றது. இதையடுத்து படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்தப் படத்தில் குமாரேசன் என்ற பெயரில் போலீஸ் கான்ஸ்டபிளாக சூரியும், வாத்தியார் பெருமாள் என்ற போராளியாக விஜய் சேதிபதியும் நடித்துள்ளார்கள். பவானி ஸ்ரீ, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், ராஜிவ் மேனன், சேட்டன், இளவரசு,டாணாக்காரன் இயக்குநர் தமிழ் உள்பட பலரும் படத்தில் நடித்துள்ளார்கள்.
படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். ஆர்எஸ் இன்போடெயின்மெண்ட் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.
மக்கள் படை தலைவராகவும்,போராளியாகவும் இருந்து வரும் விஜய் சேதுபதியை உயிருடனோ அல்லது பிணமாகவோ போலீஸ் பிடிக்கும் ஆபரேஷனே படத்தின் கதையாக அமைந்துள்ளது. விடுதலை படத்தின் முதல் பாகமான இந்த கதை அமைந்திருக்கும் நிலையில், சுமார் 2.42 நிமிடங்கள் ஓடும் டிரெய்லர் அழுத்தமான காட்சிகளுடன் இடம்பெற்றுள்ளது.