“இங்கே எவன் ஆளனும்னு நான் தான் முடிவு பண்ணுவேன்”.. மிரட்டலான ‘பத்து தல’ படத்தின் மாஸ் டிரெய்லர்!

Published:

சிம்பு & கௌதம் கார்த்திக் நடிக்கும் பத்து தல படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ திரைப்படத்தில் நடித்துள்ளார். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன ‘மஃப்ட்டி’ படத்தின் ரீமேக்காக ‘பத்து தல’ படம் உருவாகிறது.

இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிகிறார்.

பத்து தல படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ஐத்ராபாத், விசாகப்பட்டினம், , கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி, துங்கபத்திரை அணை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கோவிலூர்,கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் நடந்து நிறைவடைந்தது.

தற்போது இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பத்து தல படத்தின் டீஸர் வெளியானது. இந்நிலையில் இன்று மாலை 6 மணி முதல் பத்து தல படத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. டீஸரில் இடம் பெறாத பல காட்சிகள் டிரெய்லர் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. முதலமைச்சர் கடத்தல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு டிரெய்லர் அமைந்துள்ளது. கௌதம் மேனன் வில்லனாக நடித்து உள்ளார் என டிரெய்லர் மூலம் தெரியவருகிறது.

சிம்பு பேசும், “இங்கே எவன் ஆளனும், மாளனும்னு நான் தான் முடிவு பண்ணுவேன்”. என்ற வசனமும், மானை ஓநாய் கொல்லும், ஓநாய் சிறுத்தை கொல்லும், சிறுத்தையை புலி கொல்லும், புலியை சிங்கம் கொல்லும், ஆனால் அந்த சிங்கத்தை கொல்றதுக்கு இன்னொரு மிருகம் பொறந்து வரலடா” என்ற வசனமும் மாஸாக அமைந்துள்ளது.

 

Related articles

Recent articles

spot_img