‘லப்பர் பந்து’ படப்பிடிப்பு தொடங்கியது

Published:

கனா, எப்.ஐ.ஆர் படங்களில் இணை இயக்குநர் மற்றும் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘லப்பர் பந்து’. இதனை சர்தார், காரி, ரன் பேபி ரன் படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இருவரும் நடிக்கின்றனர். நாயகிகளாக சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி புகழ் சஞ்சனா கிருஷ்ண மூர்த்தியும் நடிக்கின்றனர்.

மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கடந்த மார்ச் முதல் வாரத்தில் துவக்க விழா பூஜை நடைபெற்ற நிலையில் தற்போது சென்னையை அடுத்துள்ள கூடுவாஞ்சேரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. கிராமத்து கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்கிறார். இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து பணியாற்றிய முதல் படமான ‘கனா’வும் கிராமத்து கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img