வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரோபோ சங்கர்

Published:

தனியார் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக பயணத்தை தொடங்கியவர் ரோபோ சங்கர். அதன்பின்னர் தமிழ் திரையுலகில் தீபாவளி, வாயை மூடி பேசவும், மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், வேலைக்காரன், ஹீரோ, உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.

சமீபகாலமாக அவரது உடல் மிகவும் மெலிந்து காணப்பட்டது. நல்ல உடல்வாக்குடன் இருந்த ரோபோ சங்கர் மெலிந்த உருவத்தில் இருக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். படத்திற்காக ரோபோ சங்கர் உடல் இடையை குறைத்தாரா? அல்லது உடல்நலக்குறைவால் அவர் இப்படி ஆனாரா? என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இதையடுத்து அவரது மனைவி, அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும், ஒரு படத்திற்காக உடல் எடையை குறைத்ததாகவும் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் ரசிகர்களின் சந்தேகத்தை தீர்க்கும் விதமாக தான் நடனமாடும் வீடியோ ஒன்றை ரோபோ சங்கர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு ரோபோ சங்கர் நடனமாடியுள்ளார். ரசிகர்கள் பலரும் ரோபோ சங்கரின் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றன

Related articles

Recent articles

spot_img