‛கேப்டன் மில்லர்’ டீசர் திகதி அறிவிப்பு

Published:

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் ‛கேப்டன் மில்லர்’. சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சுந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் குறித்து அறிவித்துள்ளனர்.

அதன்படி, இந்த படத்தின் டீசர் வருகின்ற ஜூலை 28ம் திகதி தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என படக்குழுவினர் புதிய போஸ்டர் உடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அன்றைய தினம் தனுஷின் 50 பட பர்ஸ்ட் லுக்கும் வெளியாக உள்ளது.

Related articles

Recent articles

spot_img