# Tags
#Bollywood

இறந்து போய் விடுவேனோ என பயந்தேன் – ஷெர்லின் சோப்ரா

ஷெர்லின் சோப்ரா

பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகை ஷெர்லின் சோப்ரா. தமிழில் ‘யுனிவர்சிட்டி’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். சமூகவலைதளத்தில் தொடர்ந்து கவர்ச்சியான போட்டோ, வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் அவ்வப்போது சர்ச்சையிலும் சிக்குவார். இந்நிலையில் தான் சிறுநீரக பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறும்போது, ‛‛2021ல் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இறந்து போய்விடுவேனோ என பயந்தேன். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர். வாரம் மூன்று டயாலிசிஸ் செய்ய சொன்னார்கள். என் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் எனக்கு சிறுநீரகம் தானம் செய்ய முன்வரவில்லை. இருப்பினும் 3 மாதம் தொடர் சிகிச்சையால் அந்த நோய் பாதிப்பிலிருந்து மீண்டு வந்தேன்” என்றார்.

மேலும் கடந்த காலங்கள் சினிமா வாய்ப்பு பெற சென்றபோது சில சினிமா இயக்குனர்கள் என்னிடம் மோசமாக நடந்து கொண்டனர். ஆபாசமாக பேசனார்கள். சிலர் எல்லை மீறி நடந்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.