திவாலான ஆபீஸ்… தெருவுக்கு வந்த கோபி… பாக்யலட்சுமி சீரியலில் அடுத்து இதுதான் நடக்குமா?

Published:

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சதீஷ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி சீரியலின் தினசரி எபிசோடுகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக சினிமாவில் வில்லன்களும், சின்னத்திரையில் வில்லிகளும் ஆக்கிரமித்து வருவது வழக்கமான ஒன்று. இதில் சின்னத்திரையில் வில்லன்கள் முக்கியமாக இருப்பது அவ்வப்போது நடக்கும் நிகழ்வு.

அந்த வகையில், விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் வில்லி இருந்தாலும் பிரபதான வில்லனாக கோபி கேரக்டர் அதகளம் செய்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். காமெடி வில்லனாவும் சீரியஸ் வில்லனாகவும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் கோபி இல்லை என்றால் பாக்கிலட்சுமி சீரியல் இல்லை என்று கூறி வருகின்றனர்.

சீரியலில் வில்லனாக இருந்தாலும் நிஜத்தில் வேறு ஒரு கேரக்டராக இருக்கும் நடிகர் சதீஷ், அவ்வப்போது பாக்கியலட்சுமி சீரியல் குறித்து ஹின்ட் கொடுத்து வருகிறார். மேலும் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடும் வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாக பரவி வருவது வழக்கம். அந்த வகையில் கோபி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவில், தெருவை துப்புரவு செய்யும் வேலையை பார்த்தபடி இருக்கும் கோபி, என்னுடைய ஆபீஸ் திவாலாகி விட்டது. அதனால் நான் இந்த நிலைமைக்கு வந்து விட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் ” பட்டது போதும் பெண்ணாலே இதை பட்டினத்தாரும் சொன்னாரே. அவ சுட்டது போதும் சிவ சிவனே, சுட்டது போதும் சொல்லாலே நான் சுகப்படவில்லை அவளாலே. காசிக்கு போறேன் ஆளை விடு. என்னை இனிமேலாவது வாழ விடு. சுட்டது போதும் சொல்லாலே..” என்று பழைய பாடலை கேப்ஷன் ஆக கொடுத்து இருக்கிறார்.

அதே நேரத்தில் இரண்டு பொண்டாட்டி கட்டினால் நிலைமை இதுதான் என்று அவர் கருத்தும் சொல்லி இருக்கிறார். இது குறித்து அதிகமான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனால் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் கம்பெனி திவாலாகிவிடுமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

https://www.instagram.com/p/CvGpxxDMh2t/

 

Related articles

Recent articles

spot_img