200 கோடி வசூலில் போட்டி போடும் ரஜினிகாந்த், விஜய்

Published:

இந்தியத் திரையுலகத்தில் ஒரு காலத்தில் 100 கோடி வசூலைப் பெறுவதென்பதுதான் ஒரு சாதனையாகக் கருதப்பட்டது. அதன் பிறகு அது 500 கோடிக்குச் சென்று இப்போது 1000 கோடி என்பதே பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.

இந்தியத் திரையுலகத்தில் இதுவரையில் ‘டங்கல் (2016)’, ‘பாகுபலி 2 (2017)’, ‘ஆர்ஆர்ஆர் (2022)’, ‘கேஜிஎப் 2 (2022)’, ‘பதான் (2023)’ ஆகிய திரைப்படங்கள் 1000 கோடி வசூலைக் கடந்துள்ளன.

தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் 500 கோடி வசூலைக் கடந்த படங்களாக ‘2.0 மற்றும் பொன்னியின் செல்வன் 1’, 400 கோடி வசூலைக் கடந்த படமாக ‘விக்ரம்’, 300 கோடி வசூலைக் கடந்த படமாக ‘பொன்னியின் செல்வன் 2′ ஆகிய படங்கள் உள்ளன.

200 கோடி வசூலைக் கடந்த படங்களாக விஜய் நடித்து வெளிவந்த ‛மெர்சல் (2017), சர்க்கார் (2018), பிகில் (2019), மாஸ்டர் (2021), பீஸ்ட் (2022), வாரிசு (2023)’ ஆகிய 6 படங்கள் உள்ளன. ரஜினியின் 200 கோடி படங்களாக ‛எந்திரன் (2010), கபாலி (2016), 2,0 (2018), பேட்ட (2019), தர்பார் (2020), ஜெயிலர் (2023)’ ஆகிய 6 படங்கள் உள்ளன. 200 கோடி வசூலைப் பொறுத்தவரை இருவரும் தற்போது சம நிலையில் உள்ளனர்.

ஆனால், விஜய் நடித்து அடுத்து வெளிவர உள்ள ‘லியோ’ படமும் 200 கோடி வசூலை நிச்சயம் கடக்கும் என இப்போதே பாலிவுட்டில் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இருப்பினும் அதிக வசூலில் 500 கோடி வசூலைக் கடந்த சாதனையை முதலில் படைத்தவர் என்பதில் ரஜினிகாந்த் உச்சத்தில் இருக்கிறார். அந்த வசூலை விஜய் படங்கள் கடக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Related articles

Recent articles

spot_img