இயக்குனர் பாலா சிறு இடைவெளிக்கு பின் இயக்கி உள்ள படம் ‛வணங்கான்’. இதில் முதலில் சூர்யா ஹீரோவாக நடித்து வந்தார். படப்பிடிப்பு நடந்து வந்த சூழலில் கதை பிரச்னையால் இந்த படத்திலிருந்து சூர்யா விலகினார். பின்னர் அருண் விஜய்யை வைத்து இந்த படத்தை ஆரம்பித்தார் பாலா. ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு திருவண்ணாமலை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்து தற்போது மற்ற பணிகள் நடந்து வரும் நிலையில் இதன் டீஸர் நேற்று(பிப்., 19) மாலை 5 மணியளவில் வெளியானது. 1:05 நிமிடம் ஓடக்கூடிய இந்த டீஸரில் வசனமே இல்லை. பின்னணி இசையும், அருண் விஜய்யின் ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.