8 C
New York

வாய் விட்டு மாட்டிய கோபி, உண்மையை உடைத்த ராதிகா, பாக்கியா கொடுத்த அதிர்ச்சி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

Published:

வாய்விட்டு கோபி சிக்கிக்கொள்ள உண்மையை உடைத்துள்ளார் ராதிகா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபியும் ராதிகாவும் சண்டை போட்டுக் கொண்டே வீட்டுக்கு வர ராமமூர்த்தி என்னம்மா பிரச்சனை என்று கேட்க ராதிகா ஒன்றுமில்லை என்று சொல்லி மேலே சென்று விடுகிறார்.

அதைக் தொடர்ந்து ஈஸ்வரி கோபியை பிடித்து ஏன் பா இப்படி கத்துக்கிட்டே வரா என்று கேட்க ஒரு சின்ன பிரச்சனைதான்மா அதுக்கு கார்ல ஏறுனதில் இருந்து சண்டை போட்டுக்கிட்டே வரா, தினமும் இப்படித்தான் கத்திக்கிட்டே இருக்கா என்று சொல்ல ஈஸ்வரி ராதிகாவை கூப்பிட்டு அவனுக்கு ஹார்ட் அட்டாக் வர நீ தான் காரணம் இப்ப எதுக்கு தினமும் அவனிடம் சண்டை போட்டுக்கிட்டு இருக்க என்று கேட்கிறார்.

உங்க பையன் ரொம்ப ஒழுங்கா என்று கேட்க ஈஸ்வரி ஆமா என் பையன் மாதிரி யாரையும் பார்க்க முடியாது ரொம்ப பொறுப்பான அமைதியான பையன். எப்பயும் உண்மையை மட்டும் தான் பேசுவான் என்று கோபியை பற்றி ஒரே பில்டப் ஆக பேச ஒரு கட்டத்தில் ராதிகா அப்படியா அப்போ உங்க பையன் ஆபீஸை இழுத்து மூடின விஷயம் உங்களுக்கு தெரியுமா என்று கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறார்.

ராதிகா சொன்னதைக் கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சியடைய ஈஸ்வரி கோபியிடம் இவ என்னப்பா சொல்றா என்று கேட்க கோபி ஆமாம்மா ராதிகா சொல்றது உண்மைதான் என்று அதிர்ச்சி கொடுக்கிறார். இதை ஏன்டா என்கிட்ட சொல்லல என்று கேட்க இந்த பிசினஸ் வச்சு தான் எல்லாத்தையும் சாதித்தேன் அப்படி இருக்கும் போது இப்போ ஆபீஸை இழுத்து மூடிட்டினேனு எப்படி சொல்றது என்று கேட்கிறார்.

இப்ப சொல்றேன் எல்லாரும் கேட்டுக்கோங்க இந்த கோபிநாத் பிசினஸ் இழுத்து மூடிட்டேன் என்று சொல்லி சோபாவில் உட்கார்ந்து கண்கலங்குகிறார். அடுத்ததாக ஈஸ்வரி சோபாவில் உட்கார்ந்து முன்னாடியே கிரெடிட் கார்டுக்கு பணம் கட்டணும்னு 2, 3 தடவை வீட்டுக்கு வந்துட்டு போனாங்க. சரி எல்லாத்தையும் சீக்கிரம் சரி பண்ணிடுவானு நினைச்சேன் ஆனா இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவில்லை என்று அழ ராமமூர்த்தி செழியன் ஆகியோர் இதெல்லாம் எதுக்குப்பா எங்க கிட்ட சொல்லல என்று கேட்கின்றனர்.

எல்லாத்தையும் அம்மாகிட்ட சொல்வியே இதையும் சொல்ல வேண்டியது தானே என்று ராமமூர்த்தி கேட்கிறார். அவர் நெஞ்சை பிடித்துக் கொண்டு இரும்ப பாக்யா தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க இப்போ உனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குமே நீ வேகவேகமா ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கிற அளவுக்கு வளர்ந்துட்டு போற, நான் ஒன்னும் இல்லாம நிக்கிறேன் ரொம்ப சந்தோஷப்படு என்று பாக்யாவை வம்பு இழுக்க அவர் எதுவும் பேசாமல் உள்ளே சென்று விடுகிறார்.

அதன் பிறகு கோபி கூடிய சீக்கிரம் புதிய பிசினஸ் தொடங்கப் போறேன் அது கண்டிப்பா வெற்றியா அமையும் நான் பழையபடி திரும்பவும் மாறுவேன் என்று அம்மாவுக்கு ஆறுதல் கூறுகிறார். இதனைத் தொடர்ந்து கோபி தண்ணீர் எடுப்பதற்கு கிச்சனுக்கு வரும்போது ஃபோனில் யாரிடமோ வேலை கேட்டுக்கொண்டே வருகிறார்.

பாக்கியா அங்கிருக்க போனை வைத்து கோபி நான் பேசுவதெல்லாம் கேட்டு இருப்பியே ரொம்ப சந்தோஷமா இருக்குமே குளுகுளுன்னு இருக்குமே என்று கேட்க யார் கஷ்டப்படுறதையும் பார்த்து சந்தோஷப்படுற புத்தி எனக்கு இல்ல என்று கூறுகிறார். நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா என நாங்க புதுசா ஆரம்பிக்க போற ரெஸ்டாரண்டுக்கு நிறைய ஆளுங்களை எடுக்க போறோம். நீங்க வேணா அங்க மேனேஜரா வந்து சேர்ந்திடுங்க நான் உங்களுக்கு வேலை தருகிறேன் என்று சொன்ன கோபி அதிர்ந்து போகிறார்.

இந்த நேரம் பார்த்து ராதிகாவும் அங்கு வந்துவிட கோபி என்னது நான் உன்னோட ரெஸ்டாரன்ட்ல வேலை செய்யுணுமா? நீ எனக்கு சம்பளம் தருவியா? பாரு ராதிகா இதை நீயே கேளு நான் ஒன்னும் அந்த அளவுக்கு அதள பாதாளத்துக்கு போகல என்று பாக்கியாவிடம் கோபப்படுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Related articles

Recent articles

spot_img