‛இந்தியன் 2′ ஜூனில் ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

Published:

‛இந்தியன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் நடிகர் கமல்ஹாசன் – இயக்குனர் ஷங்கர் கூட்டணி நீண்ட இடைவெளிக்கு பின் இணைந்த படம் ‛இந்தியன் 2′. கமல் உடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். பல பிரச்னைகள், தடைகள் கடந்து இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

இந்தியன் 2 மட்டுமல்ல இந்தியன் 3 படத்திற்கான படப்பிடிப்பும் சேர்ந்தே முடிந்துள்ளது. தற்போது இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சில மாதங்களுக்கு முன் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இந்தியன் 2 படம் மே மாதம் திரைக்கு வரும் என கூறப்பட்ட நிலையில் தற்போது ஜூனில் திரைக்கு வருவதாக படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. அதேசமயம் ரிலீஸ் தேதியை குறிப்பிடவில்லை. பார்லிமென்ட் தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு படத்தின் வெளியீடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் 2 படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பான் இந்தியா படமாக ரிலீஸாக உள்ளது. விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் கமல் நடிப்பில் வெளியாகும் படம் என்பதாலும், இந்தியன் படத்தின் தொடர்ச்சி என்பதாலும் இந்த படம் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

 

Related articles

Recent articles

spot_img