”விஜய்69” படத்துக்கு ஜோடியாக 4 நடிகைகளிடம் பேச்சுவார்தை.

Published:

பிரபல நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.படத்துக்கு யுவன் ஷங்கர் ராிா இசையமைத்துள்ளார்.

தற்போது இப்படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.விரைவில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைய உள்ளது. அதன்பின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்குகிறது.

வருகிற 14 – ந்தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடல் வெளியாகுகிறது. மேலும் ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தை முன்னிட்டு GOAT படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக்கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்கினார்.அதை தொடர்ந்து அரசியல் பணிகளில் தீவிரம் காட்டியுள்ளார்.

‘தளபதி – 69’ படத்திற்கு பிறகு சினிமா நடிப்பில் இருந்து விலகுவதாகவும் விஜய் தெரிவித்தார். இந்நிலையில் தளபதி- 69 படத்தில் விஜயை இயக்கும் வாய்ப்பு இயக்குனர் எச்.வினோத்துக்கு கிடைத்தது. அவரின் ஸ்கிரிப்ட்டை விஜய் அங்கீகரித்தார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.வருகிற ‘மே’ மாதம் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தளபதி – 69 படத்தில் கதாநாயகியாக நடிக்கப்போவது யார் என்ற கேள்வி தற்போது எழுந்து உள்ளது. மேலும் விஜய்யின் கடைசி படம் இது என்பதால் விஜய்யுடன் இதுவரை நடிக்காத ஒருவரை கதாநாயகியாக நடிக்க வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக 4 கதாநாயகிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதில் பிரபல நடிகை மிருனால் தாக்கூர், பாலிவுட் நாயகி அலியா பட், மற்றும் திரிஷா, சமந்தா ஆகியோர் பெயர் இடம் பெற்று உள்ளது. இதில் மிருனால் தாக்கூர், அலியாபட் ஆகியோரில் ஒருவருக்கு தளபதி 69 படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

மேலும் இயக்குனர் எச்.வினோத், நடிகர் விஜய் இருவரும் இணைந்து விரைவில் கதாநாயகியை முடிவு செய்ய உள்ளனர்.

 

 

 

 

Related articles

Recent articles

spot_img