‘குட் பேட் அக்லி’ படத்தில் கமிட்டான ரஜினியின் ஜெயிலர் பட நடிகர்….

Published:

அஜித் மற்றும் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகும் விடாமுயற்சி திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பது தான் அனைவரது கேள்வியாகவும் இருந்து வருகின்றது. அஜர்பைஜானில் விறுவிறுப்பாக விடாமுயற்சி படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் திடீரென படக்குழு சென்னைக்கு திரும்பியது. அதற்கு காரணம் அஜர்பைஜானில் நிலவி வந்த அதிகப்படியான பனிப்பொழிவு தான் என சொல்லப்பட்டது.

ஆனால் அதன் பிறகு விடாமுயற்சி பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை. படத்தை பற்றி பல வதந்திகள் இணையத்தில் வெளியாகிக்கொண்டே இருந்தன. இது அஜித் ரசிகர்களை கவலையில் ஆழ்த்திய நிலையில் தற்போது அவர்களை மகிழ்விக்கும் வகையில் ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது அஜித்தின் விடாமுயற்சி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தேர்தல் முடிவடைந்த பிறகு துவங்கும் என தெரிகின்றது.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க அஜித் மறுபக்கம் தன் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடிப்பதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. கடந்த சில மாதங்களாகவே அஜித் மற்றும் ஆதிக் இணைய இருப்பதாக தகவல்கள் வந்த நிலையில் தற்போது அந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அஜித்தின் அதி தீவிர ரசிகரான ஆதிக் மார்க் ஆண்டனி என்ற படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பதித்த ஆதிக் அதன் பிறகு அஜித்தை இயக்கும் வாய்ப்பினையும் பெற்றார். ஆதிக்குடன் அஜித் இணைந்துள்ளது பலரது எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. கண்டிப்பாக இப்படம் மார்க் ஆண்டனி போல ஒரு வித்யாசமான படமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் குட் பேட் அக்லி படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும், இப்படம் ஒரு காமெடி படமாக உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. அஜித் முழுக்க முழுக்க ஒரு காமெடி படத்தில் நடித்ததே இல்லை என்பதால் இப்படத்தை எதிர்நோக்கி அனைவரும் காத்துகொண்டு இருக்கின்றனர். அதே சமயத்தில் அஜித்திற்கு காமெடி திரைப்படம் செட் ஆகுமா என்ற சந்தேகமும் சிலரிடம் இருந்து தான் வருகின்றது.

இந்நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிகர் சுனில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக தகவல் வந்துள்ளது. தெலுங்கில் பிரபலமான நடிகரான சுனில் புஷ்பா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானார். மாவீரன், ஜெயிலர், ஜப்பான், மார்க் ஆண்டனி என தமிழில் பல படங்களில் நடித்து தமிழிலும் பிஸியான நடிகராக உருவெடுத்துவிட்டார் சுனில்.

ஜப்பான் படத்தை தவிர இவர் நடித்துள்ள தமிழ் படங்கள் அனைத்துமே வெற்றிபெற்றுள்ளது. எனவே தமிழில் ராசியான நடிகராக கருதப்படும் சுனில் தற்போது அஜித்தின் குட் பேட் அகிலி படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதையடுத்து குட் பேட் அக்லி திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெரும் என அஜித் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது

.

Related articles

Recent articles

spot_img