சிம்பு போல் ஒல்லியாகும் நடிகை..

Published:

பொதுவாக நடிகர்கள் ஒவ்வொரு படத்திலும் அவர்களது தோற்றத்தில் வித்தியாசம் இருக்கும். அந்தப் படத்தில் தனது பாத்திரத்திற்கு ஏற்றார் போல் உடம்பை தயார் செய்து கொள்வார்கள்.

அவ்வாறு சில வருடங்களுக்குப் பின் சிம்பு நல்ல பருமனுடன் இருந்தார். இப்போது தன்னுடைய படங்களில் ஒல்லியான தேகத்துடன் காட்சி அளிக்கிறார். இந்நிலையில் படத்திற்காக 85 கிலோ எடை நடிகை ஒருவர் ஏற்றினார்.

இப்போது அதைக் குறைக்க முடியாமல் மிகுந்த சிரமப்பட்டார். அதாவது தெலுங்கில் சைஸ் ஜீரோ, தமிழில் இஞ்சி இடுப்பழகி என்ற பெயரில் வெளியான இந்த படத்திற்காக அனுஷ்கா ஷெட்டி தனது உடல் எடையை அதிகரித்தார்.

இந்தப் படம் பெரிய அளவில் போகவில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் அனுஷ்காவுக்கு வரவில்லை. இதற்கு காரணம் அவரது உடல் எடை குறைக்க முடியாமல் அவதிப்பட்டு வருவது தான்.

தன்னுடைய எடையை குறைக்க முடியாத காரணத்தினால் சம்பளத்தை குறைத்திருக்கிறார் அனுஷ்கா. அதாவது 4 கோடியில் இருந்து 3 கோடிக்கு இறங்கிவிட்டாராம். அதுவும் சிம்பு போல் டெக்னாலஜி பயன்படுத்தி படத்தில் ஒல்லியாக குறைக்கிறார்களாம்.

இப்போது அனுஷ்கா மலையாளத்தில் கத்தனார்- தி வைலட் சோசாரர் என்ற படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார். ரோஜன் தாமஸ் இயக்கத்தில் இந்த படம் இரண்டு பாகமாக உருவாகியுள்ளது.

இதில் அனுஷ்காவுக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படம் மட்டும் அனுஷ்காவுக்கு க்ளிக் ஆனால் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வர வாய்ப்பு இருக்கிறது.

Related articles

Recent articles

spot_img