கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம், ‘புஷ்பா தி ரைஸ்’.பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கிய இந்த படம் வெற்றி பெற்றதையடுத்து, இதன் அடுத்த பாகம் புஷ்பா- 2 தி ரூல் படம் தற்போது உருவாகி வருகிறது.
இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் பாகத்தை விட மிகவும் பிரம்மாண்டமாக இந்தப் படம் தயாராகி வருகிறது.
இப்படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனாவின் ஸ்ரீவல்லி கதாபாத்திர தோற்றத்தை அவரது பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டது. அதில் முதல் பாகத்தைக் காட்டிலு சற்று வித்தியாசமான தோற்றத்தில் அவர் காணப்படுகிறார்.
இந்நிலையில் புஷ்பா- 2 ‘டீசர்’ நாளை ( 8- ந் தேதி) வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. வருகிற ஆகஸ்ட் 15 – ந்தேதி திரையரங்குகளில் புஷ்பா- 2
படம் ‘ரிலீஸ்’ செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.