பல முன்னணி நடிகர்களும் பழைய கதைகளையே மீண்டும் மீண்டும் படமாக எடுக்கும் போது புதிய முயற்சிகளோடு களமிறங்கும் சிறிய திரைப்படங்கள் வெற்றிபெறுவதென்பது கடினமான ஒன்று எனலாம். அவ்வாறு புத்துணர்ச்சியான புது கதையுடன் பிரதீப் ரங்கநாதன் அவரே இயக்கி அவரே நடித்த திரைப்படம் லவ் டுடே ஆகும். இதன் வெற்றியின் காரணமாக 5000 கோடியில் இணைகிறார் பிரதீப்.
குறும் திரைப்படங்களை இயக்கி எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாத்துறைக்கு வந்தவர் பிரதீப் ஆவார். ஜெயம்ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி திரைப்படமே இவரது முதலாவது திரைப்படம் ஆகும். இதன் வெற்றியை தொடர்ந்தே இவரது இயக்கத்தில் இவர் நடித்த திரைப்படமான லவ் டுடே படத்தின் ஊடாக பிரபலமானார். இவர் தற்போது LIC என்ற புதிய திரைப்படத்திலும் நடித்து வருகின்றார்.
இந்திய அளவில் மிகவும் பிரபலமாக உள்ள தயாரிப்பு நிறுவனம் மைத்திரி மூவி மேக்கர்ஸ் ஆகும். குறித்த நிறுவனமானது தென்னிந்திய திரைப்படங்களை தயாரிப்பதற்காக சுமார் 5000 கோடி ரூபாவை ஒதுக்கி உள்ளது. பல முன்னணி நடிகர்கலின் திரைப்படங்களும் அடங்கும் இந்த பட்டியலில் பிரதீப் ரங்கநாதனின் திரைப்படமும் இருப்பதாகவும், அதன் பட்ஜெட் 100 கோடிக்கு மேல் இருக்கலாம் எனவும் வலைப்பேச்சு அந்தணன் குறிப்பிட்டுள்ளார்.