’ஆரம்பிக்கலாமா’ வெங்கடேஷ் பட்யின் போஸ்ட்டை கண்டு குழம்பித் தள்ளும் ரசிகர்கள்

Published:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் நான்கு சீசன்களாக நடுவராக இருந்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானவர் தான் செஃப் வெங்கடேஷ் பட். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.

மேலும் இவர் சொந்தமாக youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றார். அது மட்டுமின்றி கிட்சன் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

குக் வித் கோமாளி சீசன் 5 இல் இவரும் பங்கு பற்றுவார் என எதிர்பார்த்த நிலையில், அவர் திடீரென விலகினார். இவரை தொடர்ந்து தயாரிப்பாளர், இயக்குனர் என அடுத்தடுத்து விலகுவதாக அதிர்ச்சி கொடுத்தனர்.

இந்த நிலையில்,  தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’ஆரம்பிக்கலாமா’ என்று கேப்ஷன் போட்டு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் வெங்கடேஷ் பட்.

மேலும் அவர் புதிய கேட்டரிங் கல்லூரி ஒன்றை ஆரம்பிக்க இருப்பதாக அண்மையில் தகவல் வெளியான நிலையில், தற்போது அவர் பகிர்ந்துள்ள வீடியோ  ரசிகர்களுக்கு கடும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனினும், அவர் பகிர்ந்த பதிவில் அவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

https://www.instagram.com/reel/C5a-k7yCZpI/?utm_source=ig_embed&utm_campaign=loading

 

Related articles

Recent articles

spot_img