விக்னேஷ் சிவன் கூறிய ஆச்சரிய தகவல்..!

Published:

என்னையும் நயன்தாராவின் சேர்த்து வைத்தது தனுஷ் தான் என இயக்குனர் விக்னேஷ் சிவன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ’நானும் ரவுடிதான்’ என்ற படத்தின் படப்பிடிப்பின் போது தான் விக்னேஷ் சிவன், நயன்தாரா இடையே பழக்கம் ஏற்பட்டது என்பதும் அதன் பின்னர் இந்த பழக்கம் காதலாக மாறி, திருமணம் குழந்தைகள் என மாறிவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’நானும் ரவுடிதான்’ படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க தனுஷ் தான் பரிந்துரை செய்தார் என்றும் அவர் சொன்னதால்தான் நயன்தாரா இந்த படத்தில் நடித்தார். அதன்பின்னர் தான் மற்றவை நடந்தது என்று விக்னேஷ் சிவன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் சேர்ந்து ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ’தனுஷ் தான் நானும் ரவுடிதான் படத்தின் கதையை நயன்தாராவிடம் சொன்னார் என்றும் நயன்தாராவுக்கு அந்த கதை மிகவும் பிடித்திருந்ததை அடுத்து அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்றும் தெரிவித்தார்.

விஜய் சேதுபதியும் இந்த படத்தின் ஸ்கிரிப்ட் தனக்கு சரியாக வருமா என்று சந்தேகத்துடன் இருந்த நிலையில் நயன்தாரா நடிக்க சம்மதம் தெரிவித்த பிறகு அவரும் ஓகே சொல்லிவிட்டார் என்றும் இந்த படத்தில் நானும் நயன்தாராவும் இணைந்து பணி புரியவும் பேசவும் பழகவும் நல்ல ஒரு வாய்ப்பாக அமைந்ததற்கு தனுஷ் தான் காரணம் என்றும் அவர் நெகிழ்ச்சியாக கூறினார்.

இந்த பேட்டியில் நயன்தாரா, ஷாருக்கான் குறித்து கூறிய போது ’பாலிவுட்டில் ஒரு மிகப்பெரிய வெற்றி படத்தில் தான் அறிமுகமாக வேண்டும் என்று காத்திருந்தேன் என்றும் அந்த வகையில் ’ஜவான்’ படம் சரியாக அமைந்தது என்றும் ஷாருக்கானை பார்த்து தான் நாமெல்லாம் வளர்ந்திருக்கிறோம், அப்படிப்பட்ட நாம் ஷாருக்கானுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்த போது அதை மிஸ் செய்ய முடியுமா? அவர் நல்ல நடிகர் என்பதை எல்லாம் தாண்டி அவர் பெண்களை மதிப்பவர்’ என்று நயன்தாரா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Related articles

Recent articles

spot_img