புஷ்பா 2 படத்தின் டீசர்.. வீடியோ இதோ

Published:

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து 2021ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புஷ்பா 1 தி ரைஸ். இப்படத்தில் அல்லு அர்ஜுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

மேலும் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருந்தார் சமந்தா. இவருடைய நடனம் புஷ்பா முதல் பாகத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் உதவியது. இதை தொடர்ந்து தற்போது புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி உலகளவில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. கடந்த 5ஆம் தேதி புஷ்பா படத்தின் கதாநாயகி ராஷ்மிகாவின் பிறந்தநாள் என்பதினால், அவருடைய கதாபாத்திர போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருந்தனர்.

இந்த நிலையில், இன்று அல்லு அர்ஜுனின் பிறந்தநாள் என்பதால் புஷ்பா 2 தி ரூல் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img