தயாரிப்பாளர்களிடம் கைகூப்பி கெஞ்சும் வெங்கட் பிரபு..

Published:

சமீபத்தில் பெரும் பேசுபொருளாக இருக்கும் திரைப்படம் என்றால் அது தளபதி விஜய் நடிக்கும் கோட் திரைப்படம் எனலாம். மாநாடு , மங்காத்தா போன்ற பல அசத்தலான திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு குறித்த திரைப்படத்தையும் இயக்குகின்றார். கோட் படத்தில் விஜயுடன் இணைந்து பிரசாந்த் , பிரபுதேவா , லைலா , சினேகா என பல முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கின்றனர்.

பொதுவாகவே விஜய் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் என்றாலும் குறித்த திரைப்படம் விஜய் அரசியலில் இறங்கிய பின்பு வரும் முதல் திரைப்படம் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. இந்த நிலையிலேயே கோட் படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெங்கட் பிரபு தனது x தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கோட் படத்தின் தயாரிப்பாளர்கள் கல்பதி குடும்பத்தினர் ஆவர். குறித்த படப்பிடிப்புகள் அனைத்திற்கும் பொறுப்பாக இவர்களின் மகள்களான அர்ச்சனா கல்பதி , ஐஸ்வர்யா கல்பதி  ஆகியோர் காணப்படுகின்றனர். இந்த நிலையிலேயே கோட் படத்தின் படப்பிடிப்பில் இவர்கள் இருவரும் தடியுடன் நிற்பது போன்றும் அவர்களை பார்த்து பயந்து கை கூப்பிக்கொண்டு வெங்கட் பிரபு நிற்பது போன்றும் ஒரு நகைச்சுவையான புகைப்படத்தை  வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.

 

Related articles

Recent articles

spot_img