என்னது மகாலட்சுமிக்கு மீண்டும் விவாகரத்தா..??

Published:

தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்த நடிகை மகாலட்சுமி. வாணி ராணி, ஆபிஸ், செல்லமே, உதிரிப்பூக்கள் மற்றும் ஒரு கை ஓசை என முக்கியமான சீரியல்களில் நடித்துள்ளார்.

இவருக்கு அனில் என்பவருடன் திருமணம் நடந்து ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால் சில காரணங்களால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டு இருவரும் மறுமணம் செய்துகொண்டார்கள்.

இவர்கள் இருவரும் உருவக்கேலிக்கு ஆளாகி பல கருத்துக்களை எதிர்கொண்டாலும் மகிழ்ச்சியாக ஜோடியாக வாழ்ந்து வருகின்றனர். புது கார் வாங்குவது, ஓட்டலுக்கு செல்வது என, ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து வருவதை புகைப்படமாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார்கள்

இவ்வாறு  இவர்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நேரத்தில் தான் ரவீந்தர் மீது ஒருவர் பண மோசடி வழக்கு தொடர்ந்து இருந்தார். இதனால் கைதான ரவீந்தர் பல போராட்டங்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பிறகு உடல்நிலை சரியில்லாமல் போக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.

இந்த நிலையில், ரவீந்தர் தனது இன்ஸ்டா பக்கத்தில், என்னை மிக மோசமான சூழ்நிலைகளில் காணவில்லை என்று பதிவு செய்துள்ளதோடு, தனது பழைய புகைப்படத்தையும் போஸ்ட் பண்ணியுள்ளார்.

இதை பார்த்த ரசிகர் ஒருவர், என்னாச்சு விவாகரத்து ஆனதா என கேட்க, அதற்கு ரவீந்தர் எனக்கு எஞ்சி இருக்கும் ஒரே உலகம் மகாலட்சுமி தான். அதனால் நீங்கள் கடினமாக பிரார்த்தனை செய்து கொண்டே இருங்கள், ஆனால் நீங்கள் நினைப்பது நடக்காது, அது சாத்தியமற்றது என பதில் பதிவு போட்டுள்ளார்.

இதேவேளை, நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/C5iGLfZSW3b/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

 

Related articles

Recent articles

spot_img