ஜீ தமிழ் சீரியலில் இருந்து விலகிய நடிகை…

Published:

ஜீ தமிழ் சேனலில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் ‘அண்ணா’ என்ற சீரியலில் இருந்து பிரபல நடிகை விலகி விட்டதை அடுத்து அவர் நடித்த கேரக்டரில் யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ் என்பதும் இதில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் மிர்ச்சி செந்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘அண்ணா’ சீரியல் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு திருப்பத்துடன் ஒளிபரப்பாகி வரும் இதில் மிர்ச்சி செந்திலில் நான்கு தங்கைகளின் ஒருவராக வீரா என்ற கேரக்டரில் நடித்த தர்ஷு என்பவர் இந்த தொடரில் இருந்து விலகுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் ’எதிர்பாராத காரணத்தினால் இந்த சீரியலில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் ‘அண்ணா’ குழுவை நான் மிகவும் மிஸ் பண்ணுவேன், எனது வீரா கேரக்டரில் புதிதாக நடிக்க உள்ள நடிகைக்கு எனக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை தனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனை அடுத்து இந்த சீரியலில் இவருக்கு பதில் இவர் என்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் வீரா கேரக்டரில் நடிப்பதற்கான நடிகை தேர்வு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

https://www.instagram.com/p/C5f-BlQvI9E/?utm_source=ig_web_copy_link

 

Related articles

Recent articles

spot_img