‘தலைவர் 171’ திரைப்படத்தில் 5 பிரபலங்களா?

Published:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தலைவர் 171’ படத்தில் 5 பிரபலங்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் ’தலைவர் 171’

இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வரும் 22ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் வரும் ஜூன் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களை லோகேஷ் கனகராஜ் தேர்வு செய்து வருவதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் 5 பிரபலங்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

அதில் ஒருவர் 90 களின் பிரபல நாயகனும் தற்போது விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தில் நடித்து வருபவருமான மைக் மோகன், ’தலைவர் 171’ நடிக்க இருப்பதாகவும் அவரிடம் பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கேரக்டர் மீண்டும் நடிக்க இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்த நிலையில் மீண்டும் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஷாருக்கானும் இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. மேலும் ’தலைவர் 171’ படத்தில் ’தளபதி’ படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்த ஷோபனா நாயகியாக நடிப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது அதே ’தளபதி’ படத்தில் நடித்த மம்முட்டியும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஆக மொத்தத்தில் மைக் மோகன், விஜய் சேதுபதி, ஷாருக்கான், ஷோபனா, மம்முட்டி ஆகிய ஐந்து பிரபலங்கள் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. அது மட்டும் இன்றி இந்த படத்தில் ரன்வீர் சிங் கூட ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

மொத்தத்தில் இந்தியா முழுவதும் உள்ள பிரபல நடிகர்கள் சிறப்பு தோற்றத்தில் ’தலைவர் 171’ படத்தில் இணைவதாக கூறப்படுவதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img