தீபாவளிக்கு வெளியாகும் அஜித்தின் ‘விடாமுயற்சி’

Published:

பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் ‘விடாமுயற்சி’. இப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார்.அஜித்தின் 62 – வது ஆக்ஷன் படமாக இது உருவாகி வருகிறது
இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் நடிகர் அர்ஜுன்,மற்றும் ஆரவ் , நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை ‘லைகா’ நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின் வடமாநிலம் உள்ளிட்டபல்வேறு இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் ‘விடாமுயற்சி’ படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ கடந்த 14-ந்தேதி வெளியிடப்பட்டது. மேலும் இந்த படத்தில் சண்டை காட்சியில் ‘டூப்’ இல்லாமல் துணிச்சலாக நடித்து அசத்தி இருந்தார். சமீபத்தில் அஜித்தின் ஒரு துணிச்சலான கார் ‘ஸ்டண்ட்’ இணைய தளத்தில் வைரலாக பரவியது. அஜித்தின் அர்ப்பணிப்பு மிக்க இந்த நடிப்பை பார்த்து ரசிகர்கள் பாராட்டினர்.அதைத் தொடர்ந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

இந்நிலையில் ‘விடாமுயற்சி’ பட தயாரிப்புக்குழு வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1-ந் தேதிஇப்படத்தை ‘ரிலீஸ்’ செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது

 

 

Related articles

Recent articles

spot_img