விஜய்சேதுபதியின் 50வது படம்

Published:

விஜய்சேதுபதியின் 50வது படமான ’மகாராஜா’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளதாகவும் இந்த படம் மே மாதம் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதியின் 50வது படமான ’மகாராஜா’ திரைப்படத்தை பேஷன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் இந்த படத்தை நிதிலன் சாமிநாதன் என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விதார்த் நடித்த ’குரங்கு பொம்மை’ படத்தை இயக்கியவர் என்பது தெரிந்தது

இந்த நிலையில் ’மகாராஜா’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன், அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி நடராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இந்த படம் மே 16ஆம் வெளியாகும் என்றும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அஜனீஷ் லோக்நாத் இசையில், தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Related articles

Recent articles

spot_img